தேடல்

ஒரு திங்கள் காலை
பணி சூழ்ந்த சாலை – இங்கேஎனக்குள் ஒரு விதமான சோகம்
ஒரு விதமான பயம்

இன்றோ… இன்றோ என்ன செய்வதென
தெரியாத ஒரு அணு ஆற்றல்
ஆரம்பம் மாத்திரம் காண முடியும் எப்படி முடியும்
என சொல்ல முடியாது…

எனினும் இருள் முடிவில் தெரியும் வெளிச்சம்
அது மட்டுமே போதும் – நான்
இன்று அதை நோக்கி ஓட…
நான் வெளிச்த்தை தேட பிறந்தவன்…

விளக்கை தேடி பறக்கும் விட்டிலை போல்
ஆனால் இந்த விட்டில் விளக்கில் விழுந்து மடியாது…
இந்த விட்டிலுக்கு தெரியும்
விளக்கு எது விடியல் எது என்று….

One thought on “தேடல்

Leave a Reply