Try at poetry…

எங்கே என் பாரதம்?

அன்றொர் நாள், கிரேக்கிய நண்பன் வந்தான் – நான் வா என்றேன்
மற்றோர் நாள், முகலாய நண்பன் வந்தான் – நான் வா என்றேன்
பின்னோர் நாள், ஆங்கிலேய நண்பன் வந்தான் – நான் வா என்றேன்

கிரேக்கியன் அறிவை எடுத்துக்கொள்ளவா என்றான் – சரி என்றேன்
முகலாயன் நிலத்தை எடுத்துக்கொள்ளவா என்றான் – சரி என்றேன்
ஆங்கிலேயன் செல்வத்தை எடுத்துக்கொள்ளவா என்றான் – சரி என்றேன்

கிரேக்கியன் பதிலுக்கு பேராசையை, பேரழிவை கற்றுக்கொடுத்தான்
முகலாயன் பதிலுக்கு வஞ்சம், மதவெறி கற்றுக்கொடுத்தான்
ஆங்கிலேயன் பதிலுக்கு சூழ்ச்சியை, போதையை கற்றுக்கொடுத்தான்

இன்று – பேராசை, வஞ்சம், சூழ்ச்சி
இவை மட்டுமே எனதருமை பாரதத்தில் –
இன்று – பேரழிவு, மதவெறி, மதுபோதை
இவை மட்டுமே எனதருமை பரதனிடம்

உலகிருந்து பயங்கரவாதி
உள்ளிருந்து அரசியல்வாதி – இல்லையில்லை பயங்கரவியாதி…

இனியும் சொல்வான் எனது பரதன் – வாவாவென்று

எங்கே என் பாரதம்?

– அரவிந்தன்

ஆசை
புத்தன் அன்று சொன்னான் –
ஆசையை துறந்தவன் மனிதனென்று
எனக்கு இன்று ஆசை –
மனிதனாக மாறவேண்டுமென்று….

-அரவிந்தன்

சுதந்திரம்
திருமணத்தில்
அலுவலில்
நண்பனிடம்
பிள்ளையிடம்
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்…
ஈடு செய்ய இல்லை நேரம்..
எனக்கென்றும் இல்லை நேரம்..

யார் சொன்னது
நான் சுதந்திர இந்தியனென்று?

-அரவிந்தன்

தனியார் மயம்
இன்று என் நாட்டில் எல்லாம் தனியார் மயம் –

கல்வி – தனியார் மயம்
தொலை தொடர்பு – தனியார் மயம்
மின்சாரம் – தனியார் மயம்
போக்குவரத்து – விரைவில் தனியார் மயம்

பின் அரசாங்கம்? – ‘அட போங்கப்பா!! எங்க வேலய பாக்கவே நேரம் பத்தல.. ‘

-அரவிந்தன்

One thought on “Try at poetry…

  1. Senthil Babu
    September 7, 2007 at 11:27 am

    கவிதை கவிதை….
    note pannungada note pannungada…
    நாங்களும் கவிதை எழுதுவோம்ல…
    ஒரு sweet staaley
    பனையாரம்
    சாப்பிடுகிறது !
    :-)
    Drawings vera joopera iruku.. unakulla pala kalaignargal irukanga.. keep it up !!

Leave a Reply